Oct 28, 2013

போலி முகவரியில் ரயிலில் பார்சல் புகையிலை பொருட்கள் சப்ளையில் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க்

சேலம், அக். 25:
ரயில் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்சலில் அனுப்பிய விவகாரத்தில் தமிழகம் முழுவதும் நெட்ஒர்க் செயல்படுவது தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கொண்டு வரப்படுவது சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படையினருக்கு தெரிந்தது. ஈரோட்டில் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
5.77 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தலில் ரயில்வே அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் மூலம் போலி முகவரியில் பார்சலில் அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தியதில், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளான மதுரை, கோவை, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி பகுதிகளுக்கும் இதற்கு முன்பு புகையிலை பொருட்கள் போலி பெயரில் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து, ரகசியமாக ரயில்வே ஊழியர்களை கையில் வைத்துக்கொண்டு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

பொருளை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் என இருவரது முகவரியும் போலியாக இருக்கிறது. ஆனால் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் மர்மநபர்கள், பார்சல் ஆபீஸ் ஊழியர்களை கவனித்துவிட்டு புகையிலை பண்டல்களை எடுத்துச் சென்று வந்துள்ளனர்.
இதனால் தற்போது சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், ஈரோடு மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன் பார்சல் ஆபீஸ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் புகையிலை கடத்தல் கும்பல் சிக்கும் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment