சென்னை, அக்.8:
தமிழ்நாடு முழுவதும் 967 குடிநீர் விற்பனை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அவற்றில் 153 நிறுவனங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றுள்ளது. உரிய அனுமதி இல்லாத மற்ற 814 நிறுவனங்களை ஆய்வு செய்யும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, 805 நிறுவனங்கள் பற்றிய ஆய்வறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம், அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் நேற்று தாக்கல் செய் தது. இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி கூறுகையில், “தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இவ்வளவு வருடங்கள் இந்த நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளன. இந்த நிறுவனங்களை இயங்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள் என்று புரியவில்லை. தமிழ்நாடு பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து காட்டுப்பாட்டு துறை, நகர திட்டமிடல் துறை இந்த 3 அமைப்புகளிடம் தகுதி சான்று பெற்றபின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி 814 நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் 29.11.13 அன்று தமிழ்நாடு பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன் நிர்வாகிகள் ஆஜராகவேண்டும் என்றும், அதுவரை வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment