Oct 25, 2013

4.3 டன் குட்கா, ஜர்தா குப்பையில் கொட்டி அழிப்பு


சென்னை : சென்னையின் பல பகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட, 4.3 டன் ஜர்தா, குட்கா பாக்கெட்டுகளை, உணவு பாதுகாப்புத் துறையினர் குப்பைக் கிடங்குகளில் குழி தோண்டி புதைத்தனர். தமிழகத்தில், குட்கா, ஜர்தா விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி, ஜர்தா, குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து, வி்ற்கும் செயல்கள் நடந்து வருகின்றன. உணவு பாதுகாப்புத் துறையினர் கட்டுப் படுத்தும் முயற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், அடையாறு பகுதியில், வெளி மாநிலத்தில் இருந்து, லாரியில் கடத்தி வரப்பட்ட, 2.8 டன், குட்கா, ஜர்தா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோன்று வடசென்னை பகுதிகளில், கடந்த வாரம் நடந்த சோதனையில், 1.5 டன் ஜர்தா, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவவாறு, பறிமுதல் செய்யப்பட்ட, 4.3 டன் ஜர்தா, குட்கா பாக்கெட்டுகள் நேற்று, சென்னை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில், குழிதோண்டி புதைக்கப்பட்டன.
இதுகுறித்து, மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் கூறியதாவது:பெருங்குடியில், 2.8 டன்னும், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், 1.5 டன் குட்கா அழிக்கப்பட்டது. ஒன்பது அடி ஆழத்திற்கு குழி தோண்டி, குட்கா பாக்கெட்டுகளை கிழித்துக் கொட்டி, சாணம், உரத்தையும் சேர்த்து புதைத்துள்ளோம்.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுரைப்படி அவ்வாறு செய்யப்பட்டு
உள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் குட்கா, ஜர்தா பாக்கெட்டுகள் விற்பனையை, வியா
பாரிகள் முற்றிலும் கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment