Oct 19, 2013

3 குடிநீர் கம்பெனிக்கு சீல்

கூடுவாஞ்சேரி, அக்.19:கூடுவாஞ்சேரி,
வண்டலூர், மண்ணிவாக்கம், காயரம்பேடு, பெருமாட்டு நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குடிநீர் கம்பெனிகள் உள்ளன.
இங்கு தரமற்ற முறையில் தண்ணீர் விற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரவீந்திரநாத், சுகுமாறன், தேவபாலன், ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நெடுங்குன்றம், மண்ணிவாக்கம், மூலக்கழனியில் உள்ள கேன் வாட்டர் கம்பெனிகளில் திடீர் சோதனை நடத்தினர். அந்த 3 கம்பெனிக்கும் சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment