நாகப்பட்டினம்,
ஜூலை.23-தயாரிப்பு
விவரம் இல்லாத பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.இது குறித்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்
ஏ.டி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலப்படம்நெய்
என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். அதற்கு தனிப்பட்ட
குணாதிசயங்கள் உள்ளன. உணவு பகுப்பாய்வு செய்யப்படும்போது அதற்கென உள்ள
அனைத்து வகையான பண்புகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அது நெய் என
கருதப்படும். இது தவறும் பட்சத்தில் கலப்படம் அல்லது தரம் குறைந்த பொருள்
என்று முடிவு செய்யப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும். இந்தநிலையில் தாவர எண்ணெய்கள், மிருகக்
கொழுப்புகள் மற்றும் வேதியியல் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை
நெய் எனக்கூறி விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டப்படி
குற்றமாகும். தயாரிப்பு விவரம்இந்த பொருட்கள் மூலம் உடல் உபாதைகள் ஏற்பட
வாய்ப்பு உள்ளது. மீறினால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்
பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் குடிசைத் தொழில் என்ற
பெயரில்ரஸ்னா பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்யப்படும்
குளிர்பானங்களில் தயாரிப்பு விவரம், தேதி, முகவரி உள்ளிட்ட எந்த விவரமும்
இல்லாமல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே
தயாரிப்பு விவரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் என்று
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment