May 30, 2013

கலப்பட டீத்தூளை ஒழிக்க வேண்டும் சுகாதாரத்துறை ஆணையருக்கு எம்எல்ஏ கோரிக்கை

நாகை, மே 30:
கலப்பட டீத்தூளை முற்றிலும் ஒழித்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை ஆணையருக்கு நாகை எம் எல்ஏ மனு அனுப்பியுள்ளார்.
நாகை மாவட்டம் கீழ்வே ளூர் எம்எல்ஏ மாலி, தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் உள்ள டீக்கடைகளில் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது கவலை அளிக்க கூடியதாகும். கடந்த காலங்களில் உணவு கலப்பட தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோது மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டுமே பொது சுகாதாரத்துறை மூலம் உணவு ஆய்வாளர்கள் தங்கள் பிரதான பணியான சுகாதார துப்புரவு பணியோடு உணவு ஆய்வுப்பணியையும் சேர்த்து உணவு கலப்பட தடுப்பு பணி யை செய்து வந்தனர். ஆனால் 5.8.2011 முதல் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டுப் பாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை மூலம் உணவு பாதுகாப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் விஷத்திற்கு சமமான கலப்பட டீத்தூள் தயாரிப்பு தங்குதடையின்றி செயல் பட்டு வருவது எப்படி?
தயாரிக்கப்பட்ட இடத்திலேயே கலப்பட டீத்தூளை கைப்பற்றி அழிப்பதிலோ அல்லது அந்த தொழிற்சாலைகளை செயல்படாமல் தடுப்பதிலோ என்ன சிரமம் இருக்க முடியும். மரத்தூள், உபயோகித்த டீத்தூள், பல்வேறு மக்கிய இலைகள், தழைகள், குதிரை கழிவு உட்பட உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பசியை மறக்க செய்ய கூடிய சிறு நீரக கோளாறுகளை ஏற்படுத்த கூடிய, உயர்ந்த பட்ச மாக புற்றுநோயை ஏற்படுத்த கூடிய ஏதேதோ சாயங்கள் கலந்துதான் கலப்பட டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த விவரம் தெரி யாமலே அப்பாவி மக்கள் டீக்கடைகளில் டீ குடித்து கொண்டு இருக்கின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமாக உள்ளனர் என்பது நல்ல அம்சம். தமிழகத்தில் மட்டும் 516க்கு மேற்பட்ட உணவு பாது காப்பு அதிகாரிகள் உள்ளனர். சென்னை மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். ஒன்றியத்திற்கு ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரியும், நகராட்சி பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்பவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். ஆகவே தமிழக அரசின் சுகாதார துறை செயலாள ரும், உணவு பாதுகாப்பு ஆணையரும் விரைந்து செயல்பட்டால் தமிழகத்தில் கலப்பட டீத்தூளை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இதன் மூலம் பல லட்சம் அப்பாவி மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment