May 30, 2013

துறையூர், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்


துறையூர், மே 30:
துறையூர், மண்ணச்சநல்லூரில் பான் பராக், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகை யிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துறையூர் நகராட்சி பகுதியில் உள்ள பெட்டிகடை, மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, சிகரெட் விளம்பரங்கள், புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆணையர் மதிவாணன் தலைமையில் இன்ஜினியர் ரவிச்சந்திரன், துப்புரவு அலுவலர் ஸ்டீபன்ராஜ், பொது சுகாதரஆய்வாளர்கள் சதானந்தம் ராஜமுர்த்தி நகராட்சி அலுவலர்கள் உள்பட 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நகராட்சி பகுதியில் உள்ள பஸ் நிலையம் பள்ளிகள் அருகில் உள்ள பெட்டிகடைகள், மளிகைகடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடைசெய்யப்பட்ட பான்மசாலா, சிகரெட் விளம்பரங்கள், புகையிலை பொருள்கள், குறைந்த மைக்ரான் அளவுள்ள பிளாஸ்ட்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் சிகரெட் விளம்பரபலகையை அகற்றி ரூ.100 அபராதம், பொதுஇடத்தில் புகைபிடித்த 5 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் மதிவாணன் கூறுகையில், இதுபோன்ற சோதனை தொடரும். பள்ளிகள் அருகில் 300 அடி தொலைவுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் கே.சி.சேரன் அறிவுரையின்படி மருத்துவ அலுவலர் டாக்டர் வல்லவராஜ் தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமரேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மனோகரன், டி.சுப்பிரமணியன், எ.சுப்பிரமணியன், விஸ்வநாதன், தட்சிணாமூர்த்தி, ஆனந்தன், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நெ.1 டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிக கடைகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்டவை விற்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

No comments:

Post a Comment