சேலம்: ""கார்பைடு கல் மூலம் பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு
மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. புகை மூலம் பழங்களை
பழுக்க வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது:
கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. கார்பைடு கல் நச்சுத்தன்மை உடையதால், நரம்பு மண்டலம் பாதிப்பு, புற்று நோய் உருவாகும். எத்திலின் அல்லது புகை கொண்டு பழங்களை பழுக்க வைக்கலாம். குளிர்பானம், சோடா, ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய செயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாக்கரீம் மற்றும் வண்ணம், 100 பிபிஎம் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. சிறு சிறு பாக்கெட்டில் கலர் பானங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அழுகிய பழங்களை கொண்டு எந்த பொருளும் தயாரிக்க கூடாது. தயாரிப்பு இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து நோய் தாக்குதலுக்கு உள்ளாகமல் இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., உரிமம் எண், பேட்ஜ் எண், காலவதி தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி ஆகியன தயாரிப்பு பொருளின் மீது கட்டாயம் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த விபரம் இல்லாத தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
அனுமதியில்லாத ஹர்பல் மற்றும் பிளேவர்டு வாட்டர் விற்பனை செய்தால், பறிமுதல் செய்யப்படும். விதிமுறை மீறுபவர்கள் குறித்து, 0427-2450332 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்ட நியமன அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண் இணை இக்குனர் சுந்தர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் பழனியம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment