காரைக்காலில் திருவள்ளுவர் வாழ்வியல் பயிற்சி நடுவம் சார்பில் 69-வது
பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி நடுவத்தின் பணிக் குழுத்
தலைவரும், திருவள்ளுவர் தமிழ் பள்ளியின் தாளாளருமான முத்துகிருஷ்ணன்
பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
மயிலாடுதுறையை சேர்ந்த வணிகர் மீ. முத்துச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உணவுப் பொருளில் கலப்படம் குறித்தும், தீர்வு முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். நுகர்வோர் பெரும்பாலானோர் விலையை பார்த்தும், பேரம் பேசியும் வாங்கிச் செல்வதில் கவனம் செலுத்தாமல், தரத்தை சோதித்துப் பார்த்து வாங்குவதில் விழிப்புணர்வு பெற வேண்டும்.
கலப்படம் மிக்க பொருள் சந்தையில் பெருகியுள்ளதால் பொதுமக்கள் உடல் நலத்தை பேணும் பொருட்டு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்திப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பயிற்சி நடுவத்தின் பணிக் குழுச் செயலர் பா. குணசேகரன் தலைமை வகித்தார். பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு முத்துச்செல்வன் விளக்கமளித்தார். பயிற்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் உமாமகேஸ்வரி செய்திருந்தார்.

No comments:
Post a Comment