Aug 5, 2012

மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை வருமா?

""உணவு பொருட்களில் நிக்கோடின் இருப்பதை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது.
இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். இவை, புற்றுநோயை கன்னம், நுரையீரல் மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பை போன்றவற் றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த பாதிப்பை தடுக்கும் வகையில் கோபா எனப்படும் புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் 2003ன் படி
மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை வருமா?

சிகரெட் உட்பட மெல்லும் புகையிலை பொருட்கள் மீது பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டன. ஆனால், இக்கட்டுபாடு இருந்தும் மத்திய அரசு முறையாக நடைமுறைபடுத்தவில்லை.
கடந்த 2008ல் மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைபடுத்தியது. இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் மீது அபாய குறியீடு பொறிக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
தடை
இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(ஒழுங்கு முறைகள்) 2011 சட்டத்தின் 2,3,4, பிரிவின் படி உணவு பொருட்களில் நிக்கோடின் புகையிலை இருக்க கூடாது. இந்த, சட்டத்தின் அடிப்படையில் குட்கா, பான்பராக், ஹான்ஸ், ஜர்தா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களை கேரளா, பீஹார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடை செய்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
புற்றுநோய் பாதிப்பை தடுக்கலாம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் சமீபகாலமாக இந்தியா முழுவதும் 42 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் நிக்கோடின் கலந்த மெல்லும் புகையிலை பொருட்களால் ஏற்படும் வாய் புற்றுநோய் தவிர்க்க அவற்றை விற்க தடை செய்துள்ளது வரவேற்கதக்கது. இதே போல தமிழகத்திலும் தடை செய்யும் பட்சத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment