ஜூஸ் கடைகளை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கூழ், தர்பூசணி, இளநீர், மோர், கரும்பு ஜூஸ், குளிர்பானங்களை வாங்கி பருகி வருகின்றனர். இதனால், சென்னை மாநகர் முழுவதும் ஜூஸ் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜூஸ் கடைகளை கண்காணிக்க அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் பழங்களை சூரிய ஒளி, வெப்பம் படாதவாறு குளிர் பெட்டி அல்லது குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருக்க வேண்டும். பழச்சாறு, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் தரமானதாக இருக்க வேண்டும்.
அழுகிய நிலையில் உள்ள பழங்களை பயன்படுத்தக் கூடாது. சர்பத்மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நீலம், ஊதா நிறங்களை சேர்க்கக் கூடாது என்பது உட்படபல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இவற்றைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment