சென்னை : சென்னையில், நான்கு பேருக்கு, காலரா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், மூன்று வெளிநாட்டு நோயாளிகள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நோயாளி என, நான்கு பேருக்கு காலரா இருப்பது கண்டறியப்பட்டது.சென்னை குடிநீர் வாரியத்தின், நடமாடும் ஆய்வகத்தின் வழியாக, மருத்துவமனையில் உள்ள குடிநீர் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பொது சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மருத்துவமனை உணவகத்தில் இருந்து, 10 மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். தற்போது, நான்கு நோயாளிகளுக்கும், அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனை குடிநீர் மற்றும் உணவில், காலரா பரவுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாக, சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து, சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய, குடிநீர் வாரியத்திற்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதே போல், கேன் குடிநீர் மற்றும் உணவு பொருட்களை ஆய்வு செய்யவும், உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment