ஓமலூர்: கொழுப்புச்சத்து இல்லாத திரவ பொருள், பாலில் கலந்துள்ளதை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், பாலில் கலப்படம் உள்ளதா என, மக்கள் அறிய, சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். அதன்படி, ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில், கலப்பட பால் கண்டறியும் கருவியுடன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று காலை, 6:00 முதல், 10:00 மணி வரை முகாம் நடத்தினர். அதில், மக்கள் கொண்டு வந்த பாலில், யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட், திரவ சோப், சோடா, ?ஹட்ரஜன் பெராக்சைடு மற்றும் உப்பு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், ''முகாமில், 49 பேர் பங்கேற்றனர். அவர்கள் கொண்டு வந்த பாலில், கொழுப்புச்சத்து இல்லாத, திரவப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, விரைவில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment