சேலம்: உணவு பாதுகாப்பு பதிவுச்சான்று பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இணையதளம் வழியாக, உணவு பாதுகாப்பு பதிவுச்சான்று பெறுதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட பொது இ - சேவை மைய ஊழியர்களுக்கு, நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. அதை தொடங்கிவைத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் பேசியதாவது: வணிகர்கள், ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள், வர்த்தகம் செய்தால், பதிவுச்சான்று பெற்றால் போதும். அதற்கான கட்டணத்தை வங்கியில் செலுத்தி, இணையதள சேவையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். உணவு வணிகரின் முகவரி, உணவு வகைகள் மற்றும் வியாபாரத்தின் வகையை, தவறின்றி குறிப்பிட வேண்டும். பதிவுச்சான்று காலாவதி ஆவதற்குள், புதுப்பிக்க வேண்டும் என்பதை, சேவை மையங்கள், அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment