சேலம்: 'குட்கா விற்றால், கடை உரிமம் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: புகையிலை நிறுவனங்கள், பான்மசாலா, நிகோடினை தனித்தனி பாக்கெட்டாக விற்கின்றன. இதை வாங்கும் மக்கள், இரண்டையும் கலந்து பயன்படுத்துகின்றனர். அவற்றை, தனித்தனியாக விற்றாலும், கடை உரிமம் ரத்து செய்யப்படும். ஏப்., 1 முதல், இதுவரை, மாவட்டத்தில், 37 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,500 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment