மல்லூர்: மல்லூர், பனமரத்துப்பட்டி பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட சிறு ஓட்டல்கள் உள்ளன. அதில், பல இடங்களில், கழிவுநீர் குட்டை, சாக்கடை அருகே, உணவு தயாரிக்கும் இடம் உள்ளது. அங்கு, குடிநீர் நிரப்பிய பாத்திரம், பிளாஸ்டிக் பேரலை மூடி வைப்பதில்லை. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி, தரைமட்ட தொட்டி, கட்டடம் மீதுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனர். ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காததால், கொசுப்புழு உற்பத்தியாகிறது. சுகாதாரமற்ற தண்ணீரில் உணவுகளை தயாரிக்கின்றனர். இதனால், குழந்தைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள், ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment