திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பான் மசாலாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ்., பார்சல் மையத்திற்கு, பெங்களூருவில் இருந்து வரும் பார்சல் வேனில், தடை செய்யப்பட்ட பான்மசாலா வருவதாக, நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மற்றும் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், பார்சல் சர்வீஸ் மையத்திற்கு நேற்று காலை சென்று, வேனில் வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பான்
மசாலா, 15 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. அதில் இருந்த முகவரியை வைத்து விசாரித்ததில், திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜித்தேந்தர், 35, அவரது சகோதரர் நவ்ராம், 34, ஆகியோருக்கு, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பான்மசாலா
பாக்கெட்டுகள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment