சேலம்: சேலத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், பொன்னமாபேட்டையில், பான் மசாலா, குட்கா ஆகியவை, சட்ட விரோதமாக பதுக்கப்பட்டுள்ளதாக, சேலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் குழுவினர், நேற்று மாலை, அப்பகுதிக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டிற்குள், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், குட்கா, பான் மசாலா ஆகியவை, 776 கிலோ அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் சிங், 40, வாடகைக்கு தங்கி, புகையிலை பொருட்களை பதுக்கி விற்றுவந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னை, உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்துக்கு அனுப்பி, மனோகர் சிங், கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரிக்கின்றனர்.
மாரியப்பன் கூறுகையில், ''போதை பொருட்களை விற்பது குறித்து தகவல் தெரிந்தால், 94440 - 42322 வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, மக்கள் தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment