சேலம்: சேலத்தில், 215 காலாவதி மைதா மூட்டைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம், சிவதாபுரத்தில், குழல் அப்பளம் தயாரிக்கும் இரு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். அதில், ருத்ரா டிரேடர்ஸ் நிறுவனத்தில், காலாவதி மைதா இருப்பு வைத்தது கண்டுபிடித்து, 50 கிலோ எடை கொண்ட, 215 மூட்டைகள் என, 10 ஆயிரத்து, 750 கிலோ மைதா பறிமுதல் செய்யப்பட்டது. பெயர், முகவரி இல்லாத தரமற்ற உப்பு, 50 கிலோ எடை கொண்ட, 85 மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நிறுவனத்தில், கலர் கலந்த போலி அப்பளம், 600 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவை, மாதிரி எடுத்து, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாரியப்பன் கூறுகையில், ''பறிமுதல் மைதாவின் மதிப்பு, 2.23 லட்சத்து, 400 ரூபாய். போலி அப்பள மதிப்பு, 18 ஆயிரம் ரூபாய். பரிசோதனை முடிவுக்கு பின், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment