சேலம்: சேலத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான்மசாலா குட்கா, பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், ஜெயந்தி ஏஜென்ஸி குடோனில், சோதனை மேற்கொண்டனர். அப்போது, 400 கிலோ எடைகொண்ட, தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பதுக்கி வைத்தது தெரிந்தது. அதில், நிக்கோடின் கலந்திருப்பது தெரிந்து, பறிமுதல் செய்து, குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மாரியப்பன் கூறுகையில், ''ஜெயந்தி ஏஜென்ஸி குடோனில், ஏற்கனவே, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்தையும் மாதிரி எடுத்து அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவு வந்ததும், வழக்குபதிந்து, மேல் நடவடிக்கை தொடரும்,'' என்றார்.
No comments:
Post a Comment