சேலம்: ஜவ்வரிசியில், மக்காச்சோள கலப்படம் தடுக்க, ஆலைகளில் பயன்படுத்தும் ஜெட் பம்பை பறிமுதல் செய்ய, விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சுந்தரம் கூறியதாவது: சேலம், நாமக்கல் மாவட்ட சேகோ ஆலைகளில், ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலக்க, பிரத்யேக பிரஷர் மோட்டார் பம்ப்ஸ் (ஜெட் பம்ப்) உபயோகப்படுத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், மின் பொறியாளர்கள் அடங்கிய குழு அமைத்து, சோதனை மேற்கொண்டு, ஜெட் பம்ப்களை பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது இல்லையெனில், ஜவ்வரிசியில் கலப்படம் செய்ய முடியாது.
குறிப்பாக, எந்த உரிமமும் இல்லாத ஆலைகளில், ஜெட் பம்ப் உபயோகப்படுத்துவதால், அத்தகைய ஆலைகளை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு, நியாயமான ஆலை உரிமையாளர்கள், தொழில் செய்ய உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment