பல்லி விழுந்த சாம்பாரை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல் வைக்கும் உணவு பாதுகாப்புத் துறையினர்.
திண்டிவனம் அருகே பாஞ்சாலம் கிராமத்தில் அரசின் திட்டப்பணிகளை செய்துவந்த தொழிலாளர்களான கண்ணன், சீனு, ரவி, செல்வம், அன்பு, ராஜேஸ்வரி, சுசிலா, ராபர்ட் அகியோர் ஒலக்கூரில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மதிய உணவு வாங்கி வந்து சாப்பிட்டிக் கொண்டிருந்தனர். அப்போது சாம்பாரில் பல்லி இறந்து கிடப்பதை கண்டவுடன் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையறிந்த ஒலக்கூர் சுகாதார மேற்பார்வையாளர் வீரப்பன் உணவு பாதுகாப்புதுறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் மோகன், கதிரவன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
பல்லி விழுந்த சாம்பாரை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல் வைக்கும் உணவு பாதுகாப்புத் துறையினர்.
No comments:
Post a Comment