ஆத்தூர்: ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில், நேற்று உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா உத்தரவுப்படி, சுகாதார ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ், சந்திரசேகர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மூன்று கடைகளில், 50 பாக்கெட்டுகள் கொண்ட, 20 கிலோ புகையிலை (ஹான்ஸ்) பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கடை உரிமையாளர்களிடம், புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டன.
ஆத்தூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கடைகளில், போதை சாக்லெட் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்கின்றனரா என, ஆய்வு செய்தனர். அப்போது, மகளிர் மேல்நிலைப்பள்ளி முன், இரண்டு கடைகளில் தரமற்ற குளிர்பான பாக்கெட், கேக் கழிவுகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், ஆத்தூர் நீதிமன்றம், நரசிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள, டீ கடைகளில், இரண்டு கிலோ போலி டீ தூள்களை பறிமுதல் செய்து, மொத்தம் ஐந்து பேருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment