நாமக்கல்: 'உணவு தொழில் செய்பவர்கள், ஆகஸ்ட், 4ம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: உணவு தொழில் மேற்கொள்பவர்களுக்காக இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டத்தின் கீழ் உணவு தொழில் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவு செய்தல் அத்தியாவசியம். உணவு தொழில் செய்பவர்களின் வேண்டுகோளின்படி, உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை ஒரு ஆண்டு, ஆறு மாதங்கள், மூன்று மாதங்கள் என காலநீட்டிப்பு செய்து வந்தது. தற்போது, இறுதி கால நீட்டிப்பாக ஆகஸ்ட், 4ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சேமித்து வைப்பவர்கள், வாகனங்களில் எடுத்துச்செல்பவர்கள், அனைவரும் உரிமம் மற்றும் பதிவுச் சான்றினை வரும் ஆகஸ்ட் மாதம், 4ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் வகைக்கேற்ப கருவூல சீட்டின் மூலமாக சம்பந்தப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். மேலும் தீதீதீ.ஞூண்ண்ச்டி.ஞிணிட் எனும் இணையதள முகவரியிலும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று வேண்டி விண்ணப்பிக்கலாம். உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய உணவுப்பாதுகாப்பு அலுவலர்களையோ, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment