Mar 4, 2016

சமையல் ஆயிலில் கலப்படம்: உணவு பாதுகாப்பு துறை அதிரடி

பரமத்தி: சமையல் ஆயிலில் கலப்படம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட காஸ்டிக் சோடா, பிளாக் பவுடர் உள்ளிட்டவற்றை, உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த, ஆதிரெட்டிபாளையத்தில் பி.பி.தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தை பழனிவேல், 45 என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக, கேரளாவிலிருந்து சமையல் ஆயிலை வாங்கி வந்து, அதை மறுசுழற்சி முறையில் எண்ணெயாக தயாரித்து, மீண்டும் விற்பனை செய்து வருவதாக, கரூர் உணவு கட்டுப்பாட்டு துறையினருக்கு புகார் சென்றது. அதயைடுத்து, மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான குழுவினர், நேற்று அந்த நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையல் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்த இருப்பு வைத்துள்ள, 21 பேரல்கள், 50 கிலோ எடை கொண்ட, 37 மூட்டை காஸ்டிக் சோடா பவுடர், பிளாக் பவுடர், 21 மூட்டைகள் ஆகியவகைளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment