சேலம்: சேலம் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், சென்னைக்கு அனுப்பப்பட்டன. சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், சென்னை தனித்தீவாக தத்தளித்து வருகிறது. இங்குள்ள மக்களின் நிவாரணத்துக்காக, வணிகவரித்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை சார்பில், நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு உணவு நிறுவனங்களிலிருந்து வழங்கப்பட்ட, பிரட், பேக்கரி உணவுகள், பெட்ஷீட் உள்ளிட்ட, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு, நேற்று காலை கண்டெய்னர் லாரியில், சென்னைக்கு அனுப்பப்பட்டது.
வணிகவரித்துறை இணை கமிஷனர் ஞானக்குமார், ரவி, துணைக்கமிஷனர் பத்மாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா ஆகியோர் தலைமையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதே போல், இன்று காலை, 10 மணிக்கு, சேலம் அஸ்தம்பட்டி வணிக வரித்துறை அலுவலகத்திலிருந்து நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு, வாகனம் சென்னை செல்ல உள்ளது எனவும், உணவு பொருட்கள் வழங்க விருப்பமுள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், இவ்வலுவலகத்துக்கு கொண்டு சேர்த்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment