சேலம், ஆக. 2:
சேலம் மாவட்டத் தில் லைசென்ஸ் இல் லா மல் இயங் கும் 60 சத வீத உண வ கங் கள், வரும் 4ம் தேதிக் குள் அனு மதி பெற வேண் டும் என்று உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
உண வுப் பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்டப் படி, உணவு வர்த் த கத் தில் ஈடு பட்டுள்ள சிறிய, பெரிய வணி கர் கள் அந் தந்த மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ ல ரி டம் பதிவு செய்து, லைசென்ஸ் பெறு வது கட்டா ய மாக் கப் பட்டுள் ளது.
இந்த உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட்டத்தை மாற்றி அமைக்க வேண் டும் என் றும், லைசென்ஸ் பெறு வ தற்கு கால அவ கா சம் அளிக்க வேண் டும் என் றும் வணி கர் கள் மத் திய, மாநில அர சுக்கு கோரிக்கை விடுத்து வந் ததை தொடர்ந்து, 4 முறை கால அவ கா சம் அளிக் கப் பட்டது. இதை ய டுத்து, வணி கர் கள் லைசென்ஸ் பெற ஆகஸ்ட் 4ம் தேதி வரை கால அவ கா சம் வழங் கப் பட்டுள் ளது. இதன் படி, தமி ழ கம் முழு வ தும் உள்ள வணி கர் கள் பதிவு சான் றி தழ் மற் றும் லைசென்ஸ் பெற்று வரு கின் ற னர்.
மேலும் இச் சட்டத் தின் படி, உட லுக்கு தீங்கு ஏற் ப டுத் தும் காரீத் தின் அளவு அதி க மாக இருப் ப தாக, ஜூன் 5ம் தேதி முதல் டில் லியை தொடர்ந்து தமி ழ கத் தி லும் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக் கப் பட்டது. இருப் பி னும் , மற்ற உண வுப் பொ ருட் களில் கலப் ப டம் செய்து விற் பனை செய் வது, பர வ லாக நடந்து வரு கி றது. பெரும் பா லான மாவட்டங் களில், பெய ர ள வில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கள், சோதனை நடத் து வ தால் உண வுப் பொருட் களில் கலப் ப டம் என் பதை தடுக்க முடி ய வில்லை.
சேலம் மாவட்டத் தில் உள்ள உண வங் களில் 40 சத வீ தம் வியா பா ரி கள் மட்டுமே, லைசென்ஸ் பெற் றுள் ள னர். மற்ற வியா பா ரி கள் கண்டு கொள் வ தில்லை. மேகி நூடுல்ஸ் விவ கா ரத் துக் குப் பின் மக் களி டையே, கலப் பட உண வுப் பொ ருட் கள் குறித்த விழிப் பு ணர்வு அதி க ரித் துள் ளது. இத னால், உண வுப் பொருள் விற் பனை செய் யும் நிறு வ னங் களை முறை யாக கண் கா ணித்து , லைசென்ஸ் பெற்று, உண வ கங் களில் சுகா தார வித மு றை கள் கடை பி டிக் கின் ற னவா என் பது குறித்து ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள ன னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது :
சேலம் மாவட்டத் தில் சிறிய மற் றும் பெரிய அள வில் 28 ஆயி ரம் உணவு நிறு வ னங் கள் இயங்கி வரு கின் றன. இதில், இது வரை 10 ஆயி ரம் நிறு வ னங் கள் பதிவு செய் தும், 1700 நிறு வ னங் கள் லைசென் சும் பெற் றுள் ளன. ஆண் டுக்கு வரு மா னம், ரூ. 12 லட் சத் துக்கு மேல் உள்ள நிறு வ னங் கள் மற் றும் அதற்கு கீழ் உள் ளவை என, இரண்டு பிரி வு களில் லைசென்ஸ் வழங்க ேவண் டும். லைசென்சை பொறுத் த வரை, மாவட்டத் தில் ஏற் னவே, 1700 நிறு வ னங் கள் பெற் றி ருந் தா லும், தற் போது, 700 நிறு வ னங் கள் மட்டும் புதுப் பித் துள் ளன. லைசென்ஸ் பெறு வ தற்கு வரும் 4ம் தேதி வரை கடைசி நாள். உணவு வர்த் த கத் தில் ஈடு பட்டுள்ள நிறு வ னங் கள் மாவட்டத் தில் உள்ள 20 ஒன் றி யங் களி லும் பதிவு மற் றும் லைசென்ஸ் பெற அலு வ லர் கள் உள் ள னர். இதே போல் தமி ழ கம் முழு வ தும் அந் தந்த ஒன் றி யங் களில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் உள் ள னர். அவர் களி டம் விண் ணப் பம் செய்து லைசென்ஸ் பெற்று கொள் ள லாம். ஆனால் பல வியா பா ரி கள் மீண் டும் கால நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உள் ள தாக கூறி லைசென்ஸ் பெறு வ தற்கு எவ் வித முயற் சி யும் எடுக் க வில்லை. இவ் வாறு அதி கா ரி கள் கூறி னார்.
No comments:
Post a Comment