மேட்டூர்:மேட்டூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், கலப்பட தேயிலை, தரமற்ற உணவு பண்டங்கள் விற்பனை செய்த, 35 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில், அலுவலர்கள் மாரியப்பன், இளங்கோவன், அன்புபழனி குழுவினர் நேற்று மேட்டூர் பஸ் ஸ்டாண்ட், ராமன்நகர், சாம்பள்ளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்த போண்டா, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பண்டங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், காலாவதி தேதி இல்லாத குளிர்பானம், பிஸ்கட், கேக் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ராமன்நகர், சாம்பள்ளி பகுதியில், டீக்கடைகளில் நடத்திய ஆய்வில், கலப்பட தேயிலை உபயோகிப்பது தெரியவந்தது.
கடைகளில் வைத்திருந்த, 5 கிலோ கலப்பட்ட தேயிலை, மளிகை கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 5,000 ரூபாய் மதிப்புள்ள, ஹான்ஸ், புகையில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வுக்கு பின் காலாவதி பொருட்கள், தரமற்ற, கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்த, மளிகை கடை, ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட, 35 கடைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா நோட்டீஸ் கொடுத்து, வருங்காலத்தில் இதே நிலை நீடித்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment