ஆத்தூர்: ஆத்தூர் நகரில், அனுமதி பெறாமல் பால் விற்பனை செய்த, இரண்டு கடைகளில், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பால் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர் நகர் பகுதியில், உரிமம் பெறாமல், தரமற்ற பால் விற்பனை செய்வதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. அதன்பேரில், ஆத்தூர் நகராட்சி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், துப்பரவு அலுவலர் முருகேசன் ஆகியோர், நகர் பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆத்தூர், புதுப்பேட்டை, வீரகனூர் ரோடுகளில், பால் விற்பனை செய்த, முத்தையன் மகன் ராஜா, லோகநாதன் மகன் பாலு ஆகிய இருவரும், நகராட்சி அனுமதி பெறாமல், கடைகளில் பால் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, கடைகளில் இருந்த பால் கேன், அளவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்கு, உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு, பரிந்துரை செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை என்ன ?
ReplyDelete