தாம்பரம், ஏப்.1:
தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தாம்பரம் வேலவன், பம்மல் ரவிச்சந்திரன், மறைமலைநகர் பாலசுப்பிரமணி, அனகாபுத்தூர் செந்தில், ஆலந் தூர் அமுதா, உள்ளகரம் தீபா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சுமார் 15 கிலோ கொண்ட 12 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனை செய்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து சோதனை நடத்தப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment