சேலத்தில் கார்பைடு கல் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீசனையொட்டி மாம்பழங்கள் வரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில் சேலத்தில் உள்ள மொத்த பழ வியாபாரக் கிடங்குகளில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளன.
இதில் சிலர் மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்காக கார்பைடு கல்களை பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது.
அந்த வகையில், சின்னக்கடை வீதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள்
குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சாலையோர கடைகளிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.
இதில் கார்பைடு கல்களைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்தது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, மாம்பழ சீசன் தொடங்கிவிட்ட நிலையில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment