கோவை, மார்ச் 31:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் சாக்ரடீஸ் தலைமையில் அதன் நிர்வாகிகள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, பரோட்டா, பூரி போன்ற உணவுப் பொருட்கள் கவர்ச்சிகரமான வண்ண பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் ஆசிட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப் பொருட்கள் 0.60 சதவிதம் மட்டும் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த வேதிப் பொருட்கள் 20 சதவீதம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கானது. எனவே உணவு பொருட்களை ரெடி மேடாக தயாரித்து பாக்கெட்டில் விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment