சூலூர், பிப். 5:
சூலூர் திருச்சி ரோடு ஆர்.வி.எஸ். கல்லூரி அருகே உள்ள ஒரு பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திவேல், அருள்ராஜ், குமரகுருபரன் ஆகியோர் சோதனை நடத்தினர். பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதில், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட குளிர்பானங்கள் காலாவதி தேதி முடிந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதி ஆகியிருந்த 1 லிட்டர் கொள்ளவு கொண்ட 96 குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment