சிதம்பரம், பிப். 21:
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரில் டாஸ்மாக் பார், உணவகம் மற்றும் சத்துணவு கூடத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, அலுவலர்கள் பத்மநாபன், அருண்மொழி ஆகியோர் நேற்று காலை அதிரடியாக ஆய்வு செய்தனர்.
பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பின்புறம் கொட்டப்பட்டிருந்த காலி பாட்டில்களை ஆய்வு செய்த போது சில பாட்டில்களில் லார்வா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தை ஆய்வு செய்தார். அங்கு பாத்திரங்களில் தண்ணீர் தோங்காமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தனர். அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் காலாவதியாகாமல் உள்ளதா? என ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த குடிநீர் தொட்டியில் ஏறி தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்றும் தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் பஸ் நிலைய டாஸ்மாக் பாரில் கிடந்த மது பாட்டிலை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பின்புறம் கொட்டப்பட்டிருந்த காலி பாட்டில்களை ஆய்வு செய்த போது சில பாட்டில்களில் லார்வா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தை ஆய்வு செய்தார். அங்கு பாத்திரங்களில் தண்ணீர் தோங்காமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தனர். அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் காலாவதியாகாமல் உள்ளதா? என ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த குடிநீர் தொட்டியில் ஏறி தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்றும் தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment