Feb 10, 2015

மானாமதுரையில் அதிரடி சோதனை காலாவதி குளிர்பானம், கலப்பட உணவுப்பொருள் பறிமுதல்


மானாமதுரை, பிப். 10:
மானாமதுரையில் நேற்று நடத்திய சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மானாமதுரையில் நேற்று பேரூராட்சி சுகாதாரத்துறையினர், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (எப்டிஏ), சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து நகரில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையில் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலை வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டன்,
மருத்துவ அலுவலர் லெட்சுமிகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை மாலை வரை நீடித்தது. அதிகாரிகள் மொத்தம் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் கலப்பட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய கடைக்காரர்களிடம், இனிமேல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே சுகாதாரத்துறையினர் ஓட்டல்கள், பேக்கரிகள், பார்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள், டிரம்கள், பாத்திரங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். தண்ணீர் பயன்படுத்தும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கும்படி அறிவுரையும் வழங்கினர்.
மேலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது. ஆய்வில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், சுகாதார அலுவலர்கள், டெங்கு தடுப்பு ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மானாமதுரையில் உணவு பாதுகாப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஓட்டல்கள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலாவதியான குளிர்பானம், தின்பண்டங்கள் மற்றும் கலப்பட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment