Feb 2, 2015

வடலூர் தைப்பூச திருவிழாவில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடு உணவு பாதுகாப்பு துறை அதிரடி

கடலூர், பிப்.1:
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வடலூர் தைப்பூச திருவிழா வள்ளலார் ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் முன்னதாக வடலூர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். உணவு விடுதிகள் மற்றும் அன்னதான விடுதிகளில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் பாக்கு மட்டை தட்டு அல்லது வாழை இலைகளில் உணவை வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தக்கூடாது.
தெரு ஓரங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங் களை அதாவது அல்வா, இனிப்பு கார வகைகளை, பேரீச்சம்பழம், அன்னாசி பழத்துண்டுகள் போன்றவற்றை பாலிதீன் பேப்பர் கொண்டு மூடி வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். இனிப்பு பண்டங்கள், பழங்கள் போன்றவற்றை ஈ மொய்க்காமலும், தெரு புழுதி படாதவாறும் மூடி வைக்க வேண்டும். பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை தயாரிக்கும் போது ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுமுறை உபயோகிக்கக்கூடாது. செயற்கை வண்ணங்கள் சேர்த்து உணவு பொருட்கள் தயாரிப்பதை நிறுத்த வேண் டும்.
தேநீர் கடைகளில் தரமான டீத்தூளை பயன்படுத்த வேண்டும். டீ கிளாஸ்களை கொதிக்கும் தண்ணீர் கொண்டு கழுவி பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் தயாரிப்போரும், கையாள்வோரும் கையுறை அவசியம் அணிய வேண்டும்.
அழுகிய பழங்களை விற்பனை செய்வதோ அல்லது அவற்றை கொண்டு பழச்சாறு தயாரிப்பதோ கூடாது. பழச்சாறு, மோர் தாய�ரிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டும். காலாவதியான உணவு பொருட் களையும், மேலுறையில் விவரங்கள் இல்லாத உணவு பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment