Jan 14, 2015

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அனுமதியின்றி கடைகளில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை



பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.14:
அனுமதியின்றி பதுக்கி விற்ற புகையிலை பொருட் களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அரு கே கடத்தூரில் அர சால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகியவை பதுக்கி வைத்து விற்பதாக கலெக்டர் விவேகானந்தனுக்கு புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் மற்றும் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாது காப்பு அதிகாரிகள் கொ ண்ட குழுவினர் கடத்தூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை, டீகடை மற்றும் பல சரக்கு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
இநத் சோதனையில் பெட்டிக்கடை மற்றும் பலசரக்கு கடைகளில் பதுக்கி வைத்திருந்த பான்பராக், ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டதால், அதிகாரிகள் எச்சரித்து அபராதம் விதித்தனர். மீண்டும் இது போல் நடந்தால், சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment