சேலம், ஜன.10:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வெல்ல உற்பத்தியாளர்கள், வெல்லம் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதையொட்டி, வெல்லம் உற்பத்தியில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலைகளில் சோதனையிட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தேக்கம்பட்டி, வட்டக்காடு, கருப்பூர், மூங்கில்பாடி, காமலாபுரம், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தும்பல், பாப்பநாயக்கன்பட்டி உள்பட பல பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள் சேலம் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வெல்லம் ஏலம் எடுக்கின்றனர். இவ்வாறு ஏலம் எடுக்கும் வெல்லத்தை வியாபாரிகள் தமிழகம் மற்றும் கொல்கத்தா, மும்பை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன்மூலம், சேலம் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டியில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பரில் சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெல்லத்தில் ரசாயனம் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வெல்லம் தயாரிப்பில் அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகள் விதித்தனர். இதையடுத்து கடந்த இரு மாதமாக உணவு பாதுகாப்புத்துறை ஆலோசனைப்படி வெல்லம் உற்பத்தி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் ஓரிரு நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வெல்லம் உற்பத்தியாளர்கள் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியில் தீவிரமடைந்துள்ளனர். வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலைகளில் சோதனையிட்டு வருகின்றனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் பரவலாக வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வெல்லம் வெளிர் மஞ்சள்நிறத்தில் வர அதிக ரசாயனம் கலப்பு, கரும்புசாறுக்கு பதிலாக சர்க்கரையை பயன்படுத்தி வந்தனர். இது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக வெல்லம் உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர். ஆலைகளில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெல்லம் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேரடியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெல்லம் உற்பத்தியாளர்களிடம் கலப்படம் இல்லாமல் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் வெல்லத்தை சிமெண்ட் மூட்டையில் கட்டி, திறந்த வெளியில் கொண்டு வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வெல்லம் மூட்டைகளில் வெல்லம் தயாரிக்கப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல் இடம் பெற்று இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத வெல்லம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டாக் டர் அனுராதா கூறினார்.

Timely alert !
ReplyDelete