Jan 23, 2015

கடைகளில் 50 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல்




பரமக்குடி, ஜன.23:
பரமக்குடியில் உரிய அனுமதியின்றி கடைகளில் விற்கப்பட்ட 50 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
பரமக்குடியில் இறைச்சிக்கடை விற்பனையாளர்கள், ஆடுகளை பரிசோதித்து நகராட்சி அனுமதி பெற்ற பின்னரே விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல், இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பரமக்குடியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பல கடைகளில் சுகாதாரத்துறை சீல் இல்லாமல் ஆடுகள் வெட்டப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடைகளில் இருந்த சுமார் 50 கிலோ ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். அதன் மீது பினாயில் ஊற்றி மண்ணில் புதைத்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இறைச்சி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் ஆடு அடிச்சாலைக்கு கொண்டு சென்று அங்கு சீல் வைக்கப்பட்ட பின்னரே இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறினால் அவர்களின் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment