திருச்சி, டிச.23:
ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடை களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகா தசி விழா துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக் கிய நிகழ்ச்சியாக வரும் ஜன வரி 1ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கலெக் டர் ஜெயஸ்ரீ உத்தரவின்பேரில் அனைத்து அடிப் படை வசதிகளும் செய்யப் பட்டு வருகின்றன. சுகாதார பணிகளும் நடந்து வருகின் றன. இதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்புத் துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலை மையில் 12 அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, ஓட்டல்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்படுகிறதா, டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா, ஓட்டலில் பிளாஸ் டிக் பைகளில் பார்சல்கள் கட்டமால் உள்ளனரா என வும் சோதனை செய்தனர். மேலும், வியாபாரிகளிடம் தரமான பொருட்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினர்.
ஓட்டல்களில் தரமான உணவு பாதுகாப்பான முறையில் பரிமாறப்படுகி றதா என சோதனை செய் தனர். சோதனையின்போது காலாவதியான குளிர்பானம் மற்றும் பொருட் களை பறிமுதல் செய்தனர்.
விழாக்காலம் முடியும் வரை இந்த சோதனை தொடரும் எனவும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
தொடரட்டும் நடவடிக்கைகள் ....
ReplyDelete