கடலூர், டிச. 19:
கடலூர் மாவட்ட சமூகநல அலு வலக வளாகத்தில், அரசு சேவை இல்ல பள்ளி மற்றும் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 356 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இந்த இல்லத்தின் சமையல் கூடத்தை, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராஜா தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்காய்கள் முற்றியதாகவும், அழுகிய நிலையிலும் காணப்பட்டன.
இது குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும், எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர்.
இது போல் சாம்பார் தூளில் அரிசி மாவு கலக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவற்றின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் சுற்றுப்புறங்களில் சுகாதார சீர்கேடாக பாசிப்படிந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
நல்ல நடைமுறைகள் (GAP, GMP,GHP) பின்பற்ற படுவதில்லை.
ReplyDelete