கம்பம், நவ.12:
கம்பம் நகரில் கலப்பட பால் விற் பனை களை கட்டி வரு கிறது. சுகாதாரமற்ற தண்ணீரை பாலில் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள், டீக்கடைகளில் அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர்.
கம்பம் நகரில் 100க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளன. சுருளி அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு தினமும் வருகின்றனர். தினமும் ரூ.பல லட்சங்களுக்கு விற் பனை நடக்கிறது. விற்பனை அதிகரிப்பதால் உணவு, பாலில் கலப்படங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பாலில் சுகாதாரமற்ற தண்ணீர் கலந்து டீ, காபி தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடை, ஓட்டல்களுக்கு விற்பவர்களும் பாலில் அதிகளவு தண்ணீர் கலப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு தர அலுவலர் மீனாட்சிசுந்தரம், கம்பம் உணவு பாதுகாப்பு அலு வலர் ஜனகர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் இங்குள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பால்மானியை வைத்து பாலின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.
ஓட்டல்களில் தண் ணீரை பல நாட்களாக இருப்பு வைத்து உணவு தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வப்போது குழாய்களில் வரும் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் தண்ணீரை சேமித்து வைக்கக்கூடாது. டீக்கடைகளில் கலப்பட பால் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
பான் மசாலா பொருட்கள் சோதனை
கம்பத்தில் பான் மசாலா, புகையிலை பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதனையடுத்து நகர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த அளவு சோதனையில் பான் மசாலா பொருட்கள் அதிகளவு சிக்கவில்லை. எனவே, இதுபோன்ற சோதனையில் அதிகாரிகள் அடிக்கடி ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment