நாமக்கல், அக்.21:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
திருமண மண்டபங்கள், பேக்கரிகளில் தயாரிக்கப்படும் இனிப்பு, காரவகைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரமான எண்ணெய், வனஸ்பதி மற்றும் நெய் வகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. தயாரிக்கப்பட்ட இனிப்பு, கார வகைகளை பாக்கெட் மற்றும் டின்களில் லேபிள் மற்றும் மூடி கொண்டு உபயோகப்படுத்துகிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, தயாரிக்கப்பட்ட இனிப்பு, காரங்கள் சுகாதாரமான முறையில் மூடிவைத்து, சேமித்து விற்பனை செய்யப்படவேண்டும் என அறிவுறுத்தினர். தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலு வலர் தமிழ்செல்வன் தெரிவித்தார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சதீஸ்குமார், செந்தில், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் திருமண மண்டபங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை ஆய்வு செய்தார்.

No comments:
Post a Comment