ஆத்தூர், அக்.19:
தீபாவளியையொட்டி தயாரிக்கும் பலகாரங்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடியாக சோதனை செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் உள்ளூர் சமையல் மற்றும் பலகார தயாரிப்பாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தரமானதாக தயாரிக்கப்படுகிறதா என்பதை நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள் திருமண மண்டபங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதையும் பலகாரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய், மாவு ஆகிய பொருட்களின் தரம் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போது உரிய தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட வேண்டும் எனவும் சுகாதாரமான முறையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுரை கூறினர்.
இதனை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து நோட்டீஸ் வழங்கினார்.

No comments:
Post a Comment