நெல்லை, செப். 23:
குற்றாலத்தில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் கருணாகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
குற்றால அருவிகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகித்து குளிபபது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அருவி பகுதிகளில் இந்த பொருட்கள் விற்கப்படுகிறதா என கணகாணிக்க வேண்டும். தடையை மீறி பொருட்கள் விற்றால் பறிமுதல் செய்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்காணிப்பு கேமிரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக மினி பஸ்களை இயக்க வேண்டும்.
குற்றாலத்தில் பேரூ ராட்சி மூலம் 125 குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறறாலம் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரமான உணவுப் பொருட் கள் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழிக்க வேண்டும்.
இவவாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், தென்காசி ஆர்டிஒ ரெகொபெயாம், நேர்முக உதவியாளர் (பொது) ஹாரிஸ், உதவி இயக்குநர்கள் ஜோதிமுருகன் (பேரூராட்சி), வீரபத்திரன் (ஊராட்சி), செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செல்வராஜ், தென்காசி தாசில்தார் சொர்ணராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment