தரங்கம்பாடி, செப். 19:
பொறையாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தவபாலன், சேகர், சதீஷ், செந்தில்குமார், பிரவீன் ஆகியோர் கொண்ட குழுவினர் தரங்கம்பாடி பொறையார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களும், காலாவதியான ஊறுகாய், அப்பளம், குளிர்பானம், ரொட்டிகள் போன்ற பொருட்களும் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டுபிடித்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.25ஆயிரம்.
இதுகுறித்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், பொதுமக்கள், உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதி, தயாரிப்பு நிறுவன முகவரி உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment