ஓமலூர், செப்.10-தொப்பூர் சோதனைச்சாவடியில் போலீசார் திடீர் சோதனை நடத்தி மூட்டை மூட்டையாக போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவர்-கிளீனர் கைது செய்யப்பட்டனர்.திடீர் சோதனைசேலம் மாவட்டம் தொப்பூர் சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ரங்கநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது பெங்களூரில் இருந்து மினி சரக்கு வேன் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அந்த சரக்கு வேன் நிற்காமல் சோதனைச்சாவடியில் இருந்து சற்றுத்தூரம் போய் நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை சோதனை செய்தார்கள். அப்போது அதில் மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் (ஹான்ஸ்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த போதை பொருட்களையும், சரக்கு மினி வேனையும் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.பறிமுதல்அதைத்தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மினி வேன் டிரைவர் விஜயகுமார்(வயது24) மேச்சேரி அருகேயுள்ள வெள்ளாறு பஞ்சாயத்து உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கிளீனர் பிரபு(வயது24) ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் சேலம் மற்றும் ஓமலூர் பகுதியில் போதைப்பொருள்களை விற்பனை செய்வதற்காக மூட்டை மூட்டையாக வேனில் கடத்தி வந்தது வெட்டவெளிச்சமானது. இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரையும், பிரபுவையும் கைது செய்தார்கள். இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். கைப்பற்றப்பட்ட மினிவேனின் ம்திப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
No comments:
Post a Comment