ஈரோடு, ஆக. 14:
ஈரோடு மாநகரில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட், கொங்காலம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி, பாதுகாப்பு ஆய்வாளர்கள் பூபாலன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment