கிருஷ்ணகிரி, ஆக.22:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளி ல் திடீர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி நக ராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறையின் மா வட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலை மையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துளசிராமன், சுவாமிநாத ன், குணசேகர், சேகர், ராஜசேகர், சிவசந்திரன், இளங்கோவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட் ட புகையிலை பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா என 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்து, அழித்தனர். உணவு பாதுகாப்புத் துறையினர் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றும், தொ டர்ந்து தவறு செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment