புதுடெல்லி, ஆக.4:
கரப் பான் பூச்சியுடன் உணவு சப்ளை செய்த ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு 1 லட்சம் உட்பட, 9 கேட்டரிங் நிறுவனங்களுக்கு ரயில்வே துறை 11.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரயில்களில் சப்ளை செய்யப்படும் உணவுகள் மோசமாக உள்ளதாக பல புகார்கள் வந்தன. இப்பிரச் னையை தீர்க்க கேட்டரிங் சேவையில் உள்ள குறை பாடுகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட் ஜெட்டில் ரயில்வே அமைச் சர் சதானந்த கவுடா அறிவித்தார். அதன்படி, ரயிலில் சப்ளை செய்யப்ப டும் உணவுகளை சோதனை செய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் இறங்கியது.
கொல்கத்தா ராஜ்தானி ரயிலில் கடந்த 13ம் தேதி நடத்திய சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. அந்த ரயிலில் ஐஆர்சி டிசி நிறுவனம் உணவு சப்ளை செய்கிறது. இதை யடுத்து அந்த நிறுவனத் துக்கு ரயில்வே துறை 1 லட் சம் அபாராதம் விதித்தது.
இதே போல் பஸ்சிம், புஷ்பக், மோதிஹாரி, சிவ கங்கா எக்ஸ்பிரஸ், கோல் டன் டெம்பிள் மெயில், நேத்ராவதி, பஞ்சாப், ஹவுரா&அமிர்த்சரஸ் மெயில் ஆகிய ரயில்களிலும் அதிரடி சோதனை நடத்தப் பட்டது. அப்போது 13 ரயில்களில் மோசமான மற்றும் சுகாதாரமற்ற முறை யில் உணவு சப்ளை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இவற்றை சப்ளை செய்த ஆர்.கே.அசோசியேட்ஸ், சன்சைன், சத்யம், பிருந்தாவன் புட் உட்பட 9 கேட்டரிங் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டது. ரயில்வே துறை எடுத்த நடவடிக்கை யில் இதுவரை 11.50 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள் ளது. 5 முறை தவறு செய் யும் கேட்டரிங் நிறுவனத் தின் லைசன்ஸ் ரத்து செய் யப்படும் என ரயில்வே அதி காரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னனி கேட்டரிங் நிறுவனங்களான ஐ.டி.சி, எம்.டி.ஆர், ஹால்டிராம் ஆகிய நிறுவனங்களின் பாக்கெட் உணவுகளை ரயில்களில் சப்ளை செய்ய ரயில்வே துறை திட்டமிட் டுள்ளது. முதல் கட்டமாக ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பிரபல கேட்டரிங் நிறுவனங்கள் தயாரிக்கும் செட்டிநாடு சிக்கன், ஐதரா பாத் பிரியாணி, சாம்பார் சாதம், ராஜ்மா சாவல் ஆகியவை வழங்கப்படவுள் ளது. இந்த பாக்கெட் உண வுகள் மைக்ரோ அவனில் சூடு செய்து பயணிகளுக்கு சப்ளை செய்யப்படும். இதற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த வகை ரெடிமேட் உணவுகள் மற்ற ரயில்களி லும் சப்ளை செய்யப்படும்.
No comments:
Post a Comment